போலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்த திமுக பிரமுகர் கைது

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் அரசு மருத்துவரின் கையெழுத்தை போட்டு, போலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்த திமுக பிரமுகர் வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள பள்ளியில் 6- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் விக்ரமிற்கு ஆதார் அட்டையில் பிறந்த தேதி திருத்தம் செய்ய மருத்துவர் சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ சான்றிதழ் பெற மாணவனின் தந்தை அங்குள்ள இ சேவை மையத்தில் மருத்துவ சான்றிதழ் பெற்றுள்ளார். இதனையடுத்து, புகைப்படத்தின் மீதும் மற்றொரு கையெழுத்து வாங்கி வருமாறு ஆதார் அதிகாரிகள் கூறியதையடுத்து, மாணவர் விக்ரம் ஏற்கனவே சான்றிதழில் கைழுத்திட்ட மருத்துவரிடம் கையெழுத்திட்டு தருமாறு கேட்டுள்ளார். அப்போது சான்றிதழை பார்த்த அரசு மருத்துவர் தன்வீர் அகமது, போலியாக சான்றிதழ் தயாரிக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், நியூடவுன் பகுதியில் உள்ள இசேவை மையம் நடத்தி வரும் திமுக பிரமுகர் வெங்கடேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version