முதலமைச்சர் முன்னிலையில் திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 250 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி, முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், திமுகவை சேர்ந்த 70 பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த கட்சியில் இருந்து விலகினர். அவர்கள் அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர். அவர்களை முதலமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். இதன் பின்னர் விவசாயிகளுக்காகவும், விவசாயம் மேம்படுவதற்காகவும் குடிமராமத்து திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் முதலமைச்சர் செயல்படுத்தி வருவதால், தாங்கள் அதிமுகவில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version