கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் பெறுவதில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் டோக்கன்களை கைப்பற்றிக் கொண்டு தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி 4 ஆயிரம் ரூபாய் அல்லாமல் 2 ஆயிரம் மட்டும் முதல் கட்டமாக வழங்குவதாக ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் டோக்கன் வழங்கப்பட்டு ரேஷன் கடைககளில் பணம் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி சேலம் மாவட்டம் தாதகாபட்டியில் ரேஷன் கடைகளில் டோக்கன் வாங்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
திமுக-வினர் சிலர் ரேஷன் கடை ஊழியர்களிடம் இருந்து டோக்கன்கள் அனைத்தையும் பறித்துச் சென்று தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்தனர்.
இதனையடுத்து தி.மு.க.வினரை துரத்திப்பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பொதுமக்கள் சூழ்ந்த அச்சத்தில், டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு, தி.மு.க.வினர் தப்பி ஓடியுள்ளனர்.
அதன்பிறகு ரேஷன் கடை ஊழியர்களிடம் டோக்கன் வாங்க பொதுமக்கள் முண்டியடித்தனர்.
தாதகபட்டியில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால், அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிவாரண தொகை வழங்குவதி செய்யப்பட்ட குளறுபடியால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.