நகர்ப்புறத்தில் உள்ளதைப் போலவே ஊர்ப்புறத்தில் உள்ள மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் நகரின் நடுவில் உள்ள சிறுவர் பூங்கா நமக்கு நாமே திட்டம் மற்றும் தனியார் பங்களிப்புடன் 60 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்துள்ளதாகவும், திமுகவினர் வேண்டுமென்றே குறைகூறி வருவதாகவும் தெரிவித்தார். நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஊர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும் என்கிற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
Discussion about this post