கொள்கையில்லாத கட்சி திமுக என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து பிரசார கூட்டம் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ராமதாஸ், திமுகவுக்கு இந்த தேர்தல் கடைசி தேர்தல் என்றும், கொள்கையில்லாத கட்சி திமுக என்றும் விமர்சனம் செய்தார்.