சேலம் மாவட்டம் ஆத்தூரில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிப் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாகக் கட்சி பேனர்கள், கொடிகள் அமைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த உத்தரவின் பேரில் ஆங்காங்கே உள்ள பேனர்கள் கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ஆத்தூரில் திமுகவினர் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரும்புக் கம்பிகளுடன் கட்சிக் கொடிகளை அமைத்துள்ளனர். ஊருக்கு உபதேசம் சொல்லும் திமுகவினர் தங்கள் கட்சி நிர்வாகிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் அதிப்ருதி தெரிவித்துள்ளனர்.