திமுகவின் பொய்யான வாக்குறுதி மருத்துவக் கனவுடன் இருந்த மேலும் ஒரு மாணவியின் உயிரை பறித்து இருக்கிறது.
சேலம் மாணவர் தனுஷ், அரியலூர் மாணவி கனிமொழயை தொடர்ந்து தற்போது வேலூர் மாணவி சௌந்தரியாவின் உயிரை குடித்திருக்கிறது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசுவின் மகள் சௌந்தரியா. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ கனவுடன் இருந்துள்ள சௌவுந்தரியா, கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார். பின்னர் வீடு திரும்பியதில் இருந்து தான் தேர்வை சரியாக எழுதவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இரண்டு நாட்களாக சோர்வுடன் இருந்த மாணவி சௌந்தரியா மன அழுத்தம் காரணமாக இன்று காலை தற்கொலை முடிவை எடுத்துள்ளார். காலை 9 மணி அளவில் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
திமுகவின் பொய்யான வாக்குறு மருத்துவக் கனவுடன் இருந்த மேலும் ஒரு மாணவியின் உயிரை பறித்து இருக்கிறது. தோல்வி பயமே மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்று அவரின் தாய் கதறுவது, காண்போரை கதிகலங்க வைக்கிறது.
சௌந்தர்யாவுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த மாணவிகளுக்கு வரக்கூடாது என்று சௌந்தர்யாவின் சகோதரி கீதா கண்கலங்கியுள்ளார். இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க தயவு செய்து நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்றும் அவர் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு கிடையாது என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. இந்த பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, வெற்றி பெற்ற பின் தற்போது நம்பிக்கையோடு இருந்த மாணவர்களை கைகழுவிவிட்டது. மேலும் நீட் தேர்வு தேதி அறிவிக்கப்படும் நாள் வரை மாணவர்களை குழப்பி வந்தது தமிழ்நாடு அரசு. நீட் தேர்வு கிடையாது என்று நம்பிக்கையோடு இருந்த மாணவர்களை வேறு வழியில் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று கடைசி நேரத்தில் திமுக அரசு தெரிவித்தபோது, மாதக்கணக்கில் தயாராக வேண்டிய தேர்வுக்கு சில நாட்களில் தயாராவது எப்படி என்று மாணவர்கள் தவித்துப்போயினர். சரியாக தயாராகாமல் தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் எதிரொலியே தேர்வுக்கு சரியாக தயாராகாத விரக்தியில் சேலம் மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதி விட்டு தோல்வி பயத்தில் அரியலூர் மாணவி கனிமொழி மற்றும் வேலூர் மாணவி சௌந்தரியா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது. மாணவர்களின் மருத்துவ கனவுகளை நொறுக்கி, தற்கொலை முடிவுக்கு தள்ளிய திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே அரசியல் கட்சியினர் மற்றும சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.
Discussion about this post