முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக-காங்கிரஸ் கூட்டணி: ஜி.கே.வாசன்

தமிழகத்தில், திமுக- காங்கிரஸ் கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்வதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை முனிச்சாலையில், மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தடம் மாறாமல் செயல்படுத்திவருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணி, முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்வதாகவும் அவர் விமர்சித்தார்.

Exit mobile version