திமுக கூட்டணியை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் : ராமதாஸ்

இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த காங்கிரஸ், திமுக கூட்டணியை தமிழகத்தில் இருந்து விரட்ட இந்தத் தேர்தல் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையை ஆதரித்து பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் வந்தவாசி தேரடி பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய ராமதாஸ், தமிழகத்தின் நலனுக்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றாத திமுக , காங்கிரஸ் கூட்டணி எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது என்றார். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளும் அதிமுக மெகா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.

Exit mobile version