தேனி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனியாக மனு தாக்கல் செய்த திமுக கூட்டணி கட்சி

தேனியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு இடம் கூட அளிக்காததால், அதிருப்தி அடைந்த அந்த கட்சியினர் தனியாக மனு தாக்கல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் 10 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 130 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஆயிரத்து 161 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடங்கள் உள்ளன. இதில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 10 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், மதிமுகவிற்கு மட்டும் 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இறுதிவரை போராடிய நிலையில், 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடங்கள் அந்த கட்சிக்கு வழங்கப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான இடங்கள் அந்த கட்சிக்கு தரப்படவில்லை. இதனால் திமுக மீது அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தனியாக மனு தாக்கல் செய்தனர். இதேபோல், காங்கிரஸ் கட்சியினருக்கும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடம் ஒதுக்கப்படாததால் அந்த கட்சியினரும் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். இட ஒதுக்கீட்டால் திமுக கூட்டணிக்குள் தற்போது சலசலப்பு நிலவி வருகிறது.

Exit mobile version