திமுக தேர்தல் பிரசாரத்திற்கு 100நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டுருந்தவர்களை அழைத்து வந்து நீண்ட நேரம் வெயிலில் காக்க வைத்திருந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இதனையொட்டி காலை 9 மணியளவில் தேர்தல் கட்சியின் பிரசாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களும் அழைத்து வரப்பட்டனர்.
வலுக்கட்டாயமாக அழைத்து வரபட்ட பெண்கள் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த தாய்மார்களும் சுமார் நான்கு மணி நேரம் கடும்
வெயிலில் காக்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அவதிக்கு ஆளாகினர். மதியம் ஒரு மணியளவில் வேட்பாளர் நவாஸ்கனி அங்கு வந்த போது, பொறுமையிழந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.