திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சலசலப்பு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஐ. பெரியசாமி பேசும் போது கூட்டணிக் கட்சியினர் கிளம்பியதால் காலியாக இருந்த சேர்களிடம் அவர் பேச நேரிட்டது

திமுக கூட்டணியில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக வேலுச்சாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திண்டுக்கல்லில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசும் போது கூட்டணிக் கட்சியினர் எழுந்து சென்றதால் சேர்கள் காலியாகின. இதனால் ஐ. பெரியசாமி தன்னுடைய பேச்சை சீக்கிரமே முடித்துக் கொண்டார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Exit mobile version