தருமபுரியில் அதிமுகவில் இணைந்த திமுக,கம்யூனிஸ்ட் கட்சியினர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே திமுக உட்பட மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கடமடையில், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

முன்னதாக, பெரிய கடைமடைப் பகுதியில் நடந்த விழாவில், திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும் அமைச்சர் கே.பி அன்பழகனை வரவேற்றனர். இதனை தொடர்ந்து, பெரியார் நகர், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில், அதிமுக கொடியை அமைச்சர் அன்பழகன் ஏற்றி வைத்தார். இதனையடுத்து, 80 பெண்கள் உட்பட 220 பேரை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Exit mobile version