நாமக்கல் மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், முதலமைச்சர் யார், பிரதமர் யார் என்று தெரியாமல் மோடியை முதலமைச்சர் என குறிப்பிட்டது நகைப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து இன்று வேட்பாளர் அறிமுகம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சின்ராஜ் நாட்டின் பிரதமர் பதிவு குறித்தும், பிரதமராக யார் உள்ளார்கள் எனத் தெரியாமலும் முதல்வர் மோடி என உளறினார். மேலும் கூட்டத்தில் பேசிய அவர், தனக்கு வாக்களித்தால் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பிரச்சனைகள் குறித்து பேசுவேன் எனக் கூறியது கூட்டத்தினரிடையே குபீர் சிரிப்பை ஏற்படுத்தியது.