மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட போட்டியில், ஆதரவு கவுன்சிலர்களை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆகிய இரு தரப்பினர் இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், திமுக கவுன்சிலர்கள் வெளியில் வந்தனர். அப்போது திமுகவின் ஒரு தரப்பைச் சேர்ந்த சிலர் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஆதரவு கவுன்சிலர்களையே காரில் கடத்திச் சென்றனர். ஒன்றியத் தலைவர் தேர்தலில் மாற்றி வாக்களித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. திமுகவினரிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால், தங்கள் கட்சி கவுன்சிலர்களையே காரில் கடத்திச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post