தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டிற்கான கலந்தாய்வு துவங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சிறப்பு கலந்தாய்வு துவங்கியது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆண்டிற்கான சிறப்பு கலந்தாய்வு இன்று தொடங்கியது. பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 27 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து905 இளங்கலை பட்டப்படிப்பு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 41 ஆயிரத்து 950 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 23ம் தேதி முழுமையான பட்டியல் வெளியான பின்பு மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ்களை வழங்கி சரிபார்த்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் என 143 இடங்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன.

Exit mobile version