3000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மம்மியின் குரல் கண்டுபிடிப்பு

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மம்மியின் குரல் எப்படி இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

எகிப்தியக் கலாசாரத்தின்படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த உடல்களைப் பதப்படுத்துவது, இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் ஒன்றாகும். எகிப்தியர்கள் இறந்தவர்களுக்கு  மற்றொரு வாழ்க்கை உண்டு என்று  கருதினர்.

எனவே அவர்கள் மறுவாழ்வுக்கு உடலைப் பதப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியம் என்றும் நினைத்தனர். அது மட்டுமல்லாமல் உடலை பதப்படுத்தும்போது அதனுடன் தங்கம், வீட்டு விலங்குகள் ஆகியவற்றை சேர்த்து பிரமீடுகளில் வைத்தனர்.

அப்படி வைக்கப்பட்ட பிரமீடுகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம், அதனை பார்க்கும் போது நமக்கு பல கேள்விகள் தோன்றும்.  அதன் ஒரு கேள்வியாக மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்பதை நாம் பலரும் யோசித்திருப்போம், ஆனால் அதற்க்கான விடை நமக்கு கிடைத்தது இல்லை.

இதற்கு விடை தேடும் முயற்சியாக சமீபத்தில் எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற இடத்தில் இருந்த கனார்க் கோயிலின் பூசாரி நேஸியாமன் என்பவரின் மம்மியை ஆய்வாளர்கள் சோதனை செய்து வந்தனர்.

இந்த மம்மியை சிடி ஸ்கேன் செய்த ஆய்வாளர்கள், மம்மியின் குரல்வளையை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கினர். பின்னர் அதன் மூலம் மெல்லின வார்த்தைகளான ஆ மற்றும் ஏ என்ற உயிரெழுத்துக்களை உச்சரித்துப் பார்த்தனர்

இவர்களின் சோதனைக்கு வெற்றியாக சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மம்மியின் ஒலி எப்படி இருக்கும் என கண்டறிந்தனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் தற்போதைக்கு குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நேஸியாமனின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Exit mobile version