200 கிலோ எடை கொண்ட டெரோசர் பறவை கண்டுபிடிப்பு

ஜூராஸிக் பார்க் படத்தில் வருவது போன்ற, பிரமாண்ட பறவையான டெரோசர் பறவையுடைய இறக்கையின் படிமங்கள், இங்கிலாந்து அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள விட் என்ற தீவில், உயிரியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பாறையில் படிமங்களாக இருந்த சில பொருட்களை அவர்கள் ஆய்வு செய்த போது, அவை 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, டெரோசர் என்ற ராட்சத பறவையின் இறக்கை என்பது தெரியவந்தது. சுமார் 20 அடி நீளம் வரை இறக்கை கொண்ட இந்தப் பறவை, ஏறத்தாழ 200 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மிகப் பெரிய பறவையான டெரோசர், தற்போதைய போர் விமானத்தின் அளவில் இருந்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version