நியூசிலாந்தில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெங்குயின் கண்டுபிடிப்பு

நியூசிலாந்தின் தென் தீவில், புதை படிமங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மிகப்பெரிய கிளி, பருந்து, வவ்வால்களின் படிமங்கள் கண்டறியப்பட்டு, அவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மனித உயரத்தில் வசித்து வந்த பெங்குயினின், முழு எலும்புக்கூடு படிவம் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பெங்குயின் சுமார் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்திருக்கும் என்றும் ஐந்தே கால் அடி உயரத்துடன், 80கிலோ எடை கொண்டதாக இருந்திருக்கும், என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் சூழலியல் மாறுபாட்டால் இது போன்ற அறிய உயிரினங்களின் இனங்கள் அழிந்திருக்கும் என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version