சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாகவும், நீர் இருப்பு 32 டி.எம்.சி. யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரைக் காட்டிலும் பாசனத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் நான்கரை அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.