கறைப்படிந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள முடியாது -அருண் ஜெட்லி

மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று சிபிஐ இயக்குநரும் சிறப்பு இயக்குநரும் கட்டாய விடுப்பில் அனுப்பட்டதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐயின் மாண்பை காக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றார். கறைப்படிந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள முடியாது என கூறிய அருண் ஜெட்லி, இந்த விவகாரத்தை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று சிபிஐ இயக்குநரும் சிறப்பு இயக்குநரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Exit mobile version