பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட கூடாது என, மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடிய நபர்கள் மற்றும் அந்த வழக்கில் பாதிக்கப்படும் பெண்கள் உள்ளிட்டோரின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
இதுபோன்ற வழக்குகளில், வழக்குப்பதிவு செய்யப்படும் போது, முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டாம் என அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.