ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இதுவரை ஓய்வூதியதாரர்களுக்கான நலத்திட்டங்கள் கருவூலம் மற்றும் கணக்கு ஆணையரகம் மூலம் நிறைவேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், வரும் காலங்களில் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கருவூலங்களை அணுகாமல், கணினி வாயிலாக தெரிந்துகொள்ள தமிழ்நாடு அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் மற்றும் சென்னை தேசிய தகவல் மையத்துடன்
இணைந்து தரவு தளம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

இந்த தரவு தளத்தை சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் தகவல்களை பெறுவது மட்டுமின்றி அவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், பண்டிகை கால முன்பணம் போன்ற விவரங்களையும் பதிவிறக்கம் செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தரவு தளம் மூலம் ஓய்வூதியம் குறித்த தெளிவுரைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், ஆகியவற்றை பதிவிறக்கம் செய்தும் சமர்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version