இலவச மின்சாரம் வழங்க பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பாய் தயாரிப்பில் லாபம் இல்லாததால், 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்குமாறு பாய் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டில் மெத்தைகள் பயன்பாடு அதிகரிப்பால், பாய் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் காவிரி கரையோர கிராமங்களில் கோரை புற்கள் அதிகம் விளைகிறது.

இந்த கோரை புற்கள் தரம் பிரிக்கப்பட்டு அவற்றில் பாய் நெய்யப்படுகிறது. பாய் நெய்யப் பயன்படும் நூல், சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் இத்தொழிலில் லாபம் பார்ப்பது கடினமாக உள்ளதாக பாய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எனவே நெசவாளர்களுக்கு வழங்குவது போல் 500 யூனிட் வரை அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

 

Exit mobile version