தொடர்ச்சியாக குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை இன்றும் கணிசமாக குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து 76 ரூபாய் 88 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து 72 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த அக்டோபர் 18-ம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version