சட்டவிரோதமாக நிலம் வாங்கியவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு

20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக கொடுத்து நிலம் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் 2018 டிசம்பர் மாதம் வரை 20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக கொடுத்து நிலம் வாங்கியவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக டெல்லியில் சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலம் நிலம் வாங்கியவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு விதிமீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொண்டதற்கு இணையான தொகையை சம்மந்தப்பட்டவர்கள் அபராதமாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version