ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பயணிகள் ரயில்களை பராமரிப்பது, இந்தியாவில் உள்ள 6,500 ரயில் நிலையங்களில் wi-fi வசதியை ஏற்படுத்துதல், சிக்னல் பராமரிப்பது, ரயில்களை இயக்குவது போன்ற பல்வேறு பணிகளை செய்வதற்கான தொகைகளை அடுத்த 100 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு ரயில்வே தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரயில்வே பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்