உத்தரப் பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.
கோவை, நீலகிரி பகுதியை சேர்ந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தனர். அங்கு நிலவிய கடும் வெயிலால், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா கவுடர் மற்றும் கோவையை சேர்ந்த கலாதேவி, தெய்வானை ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்களை கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பச்சையா கவுடர் மற்றும் தெய்வானை ஆகியோரின் உடல்கள் ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 3 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து 5 பேரின் உடல்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.