கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும், தற்போது வரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 567 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 225ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் 80 ஆயிரத்து 894 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 237ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் 31 ஆயிரத்து 506 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், 2 ஆயிரத்து 503 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் புதிதாக ஆயிரத்து 192 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 598 பேரும், ஜெர்மனியில் 26 பேரும் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். தென் கொரியாவில் 84 பேரும், பிரான்ஸில் 175 பேரும், அமெரிக்காவில் 116 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version