திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஆதினமிளகி அய்யனார் கோவில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அப்போது மாடுபிடி வீரரான பாலகுரு, மாட்டின் திமிலை கட்ட முயன்றபோது, மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக பாலகுரு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மதகுபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.