இலங்கை நாடாளுமன்றம் வரும் 5 -ஆம் தேதி கூடுகிறது -ராஜபக்சே

இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூட உள்ளதாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது முதல் இலங்கை அரசியலில் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அரசியல் காரணங்களால் அதிபர் சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான தடை உத்தரவை தளர்த்த அதிபர் சிறிசேனா மற்றும் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், அதிபர் சிறிசேனா, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், நாடாளுமன்ற முடக்கத்திற்கான தடை உத்தரவை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இந்த தகவலை பிரதமர் ராஜபக்சேவும் உறுதிபடுத்தியுள்ளார்.

இதனையடுத்து வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இலங்கை அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version