மக்களவை தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு

மக்களவை தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் ஜூன் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, வரும் ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. கூட்டணி, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version