சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் எரிந்து சாம்பல் -அமைச்சர் நிலோபர் கபீல் நேரில் ஆறுதல்

வாணியம்பாடியில் கியாஸ் சிலின்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியில் ராமு என்பவர் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. தீ விபத்தால் வீடுகளை இழந்த 6 குடும்பத்தினர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், நகர செயலாளர் ஜி.சதாசிவம், வட்டாட்சியர் கிருஷ்ணவேணி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் அரசு சார்பில் ஒரு குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 5 கிலோ அரிசி, வேட்டி, சேலை , 2 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் அமைச்சரின் சொந்த நிதியில் இருந்து ஒரு குடும்பத்திற்க்கு 10 ஆயிரம் ரூபாய் என்று 6 குடும்பங்களுக்கு 60 ஆயிரம் ரூபாயை அமைச்சர் நிலோபர் வழங்கினார்.

Exit mobile version