இலங்கையில் ஊரடரங்கு உத்தரவு நாளை காலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் வேளையில், கட்டுநாயகே சர்வதெச விமான நிலையத்தில் முகமூடியுடன் வந்த பயணி ஒருவர் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால், நிலத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனிடையே இஸ்லாமிய பள்ளிவாசல்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமையன்று பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளிவாசல் செல்வதை தவிர்க்குமாறு இஸ்லாமிய சமய விவகாரங்கள் துறை அமைச்சர் அப்துல் ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் குறையாமல் உள்ளது. இதையடுத்து இன்று இரவுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, நாளை காலை 4 மணி வரை நீட்டித்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.