கருப்பின இளைஞர் கொலை தொடர்பாக வன்முறை நீடிப்பதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினியபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டார். அப்போது, காவல் அதிகாரி ஒருவர் அவரை கீழே தள்ளி கழுத்தை காலால் நசுக்கியபோது, அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜார்ஜியா, விஸ்கான்சின், டெக்சாஸ், கொலம்பியா போன்ற பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக் காரர்கள், உணவகம், வங்கி ஆகியவற்றுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக, வாஷிங்டன் உட்பட 40 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போதும் கலவரம் வெடிக்காமல் தடுப்பதற்காக, பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version