அம்பத்தூர் அருகே வீட்டு வாசலில் செல்போன் பேசி கொண்டிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ரியல்எஸ்டேட் தரகர் வீரமணி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீரமணி, தனது வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் வீரமணியை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த வீரமணி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் தனிபடை அமைக்கபட்டு போலிசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கொலை செய்தது லேகநாதன், சரவணன் தயாளன் மற்றும் பிரோம்குமார் என்பது தெரியவந்தது. மேலும் தொழில் போட்டியில் வீரமணி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலிசார் குற்றவாளிகளை நீதிபதி முன் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது!
-
By Web Team

Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023