கீழடி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு 30 நாட்களில் 33 ,000 பேர் வருகை தந்துள்ளதாக கீழடி அருங்காட்சிய நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக தற்காலிகமாக மதுரையிலுள்ள உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள, இந்த அருங்காட்சியத்தை கடந்த 30 நாட்களில் மட்டுமே 33 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.