தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீதமாக, சுங்க வரியை மத்திய நிதியமைச்சகம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, வர்த்தக ரீதியில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான சுங்கவரியை, 200 சதவீதமாக அதிகரித்து, மத்திய நிதியமைச்சகம் உடனடியாக அமல்படுத்தியுள்ளது.