ஹீரோ படத்துக்காக கேம் ஒன்றை உருவாக்கிய படக்குழு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக கேம் ஒன்றை படக்குழு உருவாக்கியுள்ளது.

இரும்புத்திரை படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ஹீரோ படத்துக்காக புதிய கேம் ஒன்றை உருவாக்கி அதற்கான விளம்பர பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழு ஆக்மெண்டட் ரியாலிட்டி ‘ஹீரோ’ என்ற கேம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ஹீரோ கேம் தற்போது கிடைக்கிறது. IOS இயங்குதளத்தில் நாளை வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. இந்த கேமை ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் விளையாடி அதில் வெற்றி பெற்றதை புகைப்படங்களாக பதிவிட்டும் வருகின்றனர்.

Exit mobile version