பெல்ஜியம் நாட்டில் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் 170 அடி உயரம் கொண்ட கிரேன் மீது மோதியதில், கிரேன் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது…
ஆன்ட்வெர்ப் துறைமுகத்திற்கு ஏ பி எல் மெக்ஸிகோ சிட்டி என்ற பிரமாண்ட சரக்குக் கப்பல் சில தினங்களுக்கு முன் வந்தடைந்தது. பின்னர் கப்பல் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் போது, கப்பலில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் ஒன்று துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 170 அடி உயரமுள்ள கிரேன் மீது உரசியது. இதில் கிரேன் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கிரேன் விழுந்த வேகத்தில் கப்பலில் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்…