108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கங்களுக்கு நீதிமன்றம் அபராதம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முயன்றது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதற்கு தடை விதிக்க கோரி செல்வராஜன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன் பிரதான வழக்கு விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே ஊழியர்கள் போராடபோவதாக அறிவித்த சட்டவிரோதம் என நீதிமன்றம் அறிவித்தது. போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி வழக்கு தொடர்ந்த செல்வராஜன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாயை வழக்கு செலவாக 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version