அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை : சசிகலா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில் சசிகலா நேரில் ஆஜராவதில் இருந்து எழும்பூர் நீதிமன்றம் விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. அன்னிய செலாவணி மோசடி விவகாரத்தில் சசிகலாவுக்கு எதிராக நான்கு வழக்குகள், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து உயர்நீதிமன்றம் விலக்களித்து உத்தரவிட்ட நகலை சசிகலா தரப்பு வழக்கறிஞர் அப்போது தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version