பிறந்து 4 நாட்கள் ஆன ஆண் குழந்தையை விற்ற தம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த தம்பதியினர் தப்பியோடியதை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் – செல்வி தம்பதியினருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அந்த குழந்தையை பிறந்து நான்கு நாட்களிலேயே காடப்பன் – செல்வி தம்பதியினர் விற்பனை செய்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், குழந்தையை ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதை அடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தம்பதிகள் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version