டிஜிட்டல் இந்தியா மூலம் இந்தியாவின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என தனது பட்ஜெட் உரையில், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020-2021ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், மக்களவை உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரான், நடுத்தர குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டில், சுமார் 16 லட்சம் பேர் புதிய வரி செலுத்தபவர்களாக தற்போது உருவாகியுள்ளதாக கூறிய அவர், இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.

ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமலானது மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவதாகவும், ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ஒவ்வொரு குடும்பத்தின் அன்றாட செலவு 4 சதவீதகமாக குறைந்துள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா மூலமாக இந்தியாவின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று கூறினார். விவசாய துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார். ஆத்திச்சுவடியை மேற்கொள்ள காட்டிய நிர்மலா சீதாராமன், ”பூமி திருத்தி உண்” என்பதை சுட்டிக்காட்டினார்.

சரக்கு-சேவை வரி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை தேசத்தை ஒன்றுப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், வர்த்தகர்களை அச்சுறுத்தம் நடவடிக்கைகள் இல்லை என்று தெரிவித்தார். இதுவரை 40 கோடி வர்த்தர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளதாகவும், முயற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக பட்ஜெட்டாக இது இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version