இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரிவசூல் 6 கோடியே 75 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நேரடி வரிகள் வாயிலாக மத்திய நிதியமைச்சகம் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நேரடி வரிகள் மூலம் 48 சதவிகிதம் வசூலாகி உள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் வசூலிக்கப்பட்ட வரி, 17 புள்ளி 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதேபோல தனிநபர் வருமான வரிவசூல் 18 புள்ளி 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 10 ஆயிரத்து 833 கோடி ரூபாய் வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரிவசூல் 6 கோடியே 75 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, இது 15.7 சதவீதம் அதிகம்.