நாடு விரைவில் வல்லரசாக மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் கபடி விளையாட்டு வீரர்கள் குழுவை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, இளைஞர்கள் தமக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்து வாழ வேண்டும் என்று கூறினார். இளைஞர்கள் நினைத்தால் இந்த நாடு விரைவில் வல்லரசாகும் என்பது தற்போது நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும் அதற்காக மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.