முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது – பிரதமர் மோடி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 88ஆவது பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

அப்துல் கலாமின் பிறந்த நாளில் நாடு அவருக்கு வணக்கம் செலுத்துகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அப்துல் கலாமின் பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் மோடி அது குறித்த படக்காட்சியையும் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version