“கலாம் சாட்” செயற்கைகோள் நாளை விண்ணில் செலுத்த உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய அளவிலான விண்கலம் கலாம் சாட் . இதனுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்தது மைக்ரோசாட்-ஆர் இமேஜிங். இந்த 2 செயற்கோள்களும் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது. நாளை இந்த 2 செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. மாணவர்கள் தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்த “மைக்ரோசாட்-ஆர் இமேஜிங்” செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.