ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 104 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 31,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கேரட் தங்கம் கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 107 ரூபாயாகவும், சவரனுக்கு 104 குறைந்து 32 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 911 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விறபனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 39 காசுகள் குறைந்து 50 ரூபாய் 40 காசுகளுக்கும், கிலோவுக்கு 390 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version