மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு ரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் மத்திய அமைச்சர் முரளிதரன் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மத்திய அமைச்சர் முரளிதரன் கேட்டறிந்தார். இந்நிலையில், அவர் ஆய்வு செய்த மருத்துமனை ஒன்றில் நோயாளி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முரளிதரனுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் முரளிதரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.